இதுதொடர்பாக அந்த குழுவின் தலைவர் Louise Frechette வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷவேந்திர சில்வாவின் பங்களிப்பு தங்கள் குழுவின் நோக்கத்துக்கு உதவிகரமாக இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், ஐ.நா.,வின் சிறப்பு ஆலோசனைக் குழு உறுப்பினர்களிடையே விவாதிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த முடிவுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வரவேற்பு தெரிவித்துள்ளது. போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத வரை, சர்வதேச அமைப்புகளில் இவ்வாறு இலங்கை ஒதுக்கப்படும் நிலையே ஏற்படும் என்றும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் கருத்து தெரிவித்துள்ளது. ஐ.நா. அமைதிக்கான நிர்வாகக் குழுவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஷவேந்திர சில்வா, இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதிப் போரின்போது, 58-வது படைப் பிரிவுக்கு தலைமை வகித்தவர். இந்த படை ஆயிரக்கணக்கான பொதுமக்களை சுட்டுக் கொன்றதாக குற்றச்சாட்டு உள்ளது. ஐநா அமைதிக்கான நிர்வாக குழுவில் மொத்தம் 10 உறுப்பினர்கள் உள்ளனர். ஐ.நா. அமைதிப் பணிகளுக்காக படைகளை அனுப்பும் உறுப்பினர் நாடுகளுக்கு இந்த குழுதான், உரிய நிதியை நிர்ணயிக்கிறது.






