Puthiya Thalaimurai

அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிகள், தேனியில் இன்று நடைபெற்றன .
தேனியில் உள்ள  உடற்பயிற்சிக் கழகம்  சார்பில்  நடத்தப்பட்ட இந்தபோட்டியில்,   தமிழகம் , கேரளா, ஆந்திரா,  கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த  வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டனர்‌. பல்வேறு பிரிவுகளின் நடத்தப்பட்ட போட்டிகளில் 700 -க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

விறுவிறுப்பு நிறைந்த இந்தபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும்,சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  தற்காப்பு கலையான கராத்தே-வின் தேவையை இளம் சமுதாயத்தின் கவனத்துக்கு  எடுத்துச்செல்லும் விதமாக இந்த போட்டிகள் நடத்தப்பட்டதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

கும்பகோணம் அருகே சோழபுரத்தில் நள்ளிரவில் ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 40 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
சோழபுரத்தில் உள்ள அப்துல்லா நகரில் நூர்ஜஹான் என்பவர் வீட்டில் இந்த கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. சம்பவம் நடைபெற்றபோது அவரும் அவரது மகளும் வேறொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். அவரது கணவர் அமானுல்லா குவைத் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் நூர்ஜஹான் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தஞ்சையில் இருந்து வரவழைக்கப்பட்ட தடய அறிவியல் மற்றும் கைரேகை நிபுணர்களும் அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் இதுவரை 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இன்று ஒரு சுயேட்சை வேட்பாளர் மனு தாக்கல் செய்துள்ளார். ரங்கசாமி என்ற அவர் பசுமை புரட்சி இயக்கத்தைச் சேர்ந்தவர். புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியின் முதல் வேட்பாளராக மேட்டூரைச் சேர்ந்த பத்மராஜன் நேற்று மனு தாக்கல் செய்தார். உள்ளூர் தேர்தல் முதல் குடியரசு தலைவர் தேர்தல் வரை அவர் தொடர்ந்து பல தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார். அவரைத் தொடர்ந்து தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேனும், அக்கட்சியின் மாற்று வேட்பாளராக தர்மசீலனும் மனு தாக்கல் செய்தனர். வரும் 25-ம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம். புதுக்கோட்டை தொகுதியில் அடுத்த மாதம் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்திய கடலோரப் பகுதிகளை பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக கடலோரக் காவல்படையின் தலைவர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இந்தப் பணிகள் வரும் அக்டோபர் மாதம் நிறைவடையும் எனத் தெரிவித்த அவர், கண்காணிப்புக் கருவிகளின் உதவியுடன் இந்திய எல்லைக்குள் வரும் கப்பல்களை முழுமையாக கண்காணிக்க முடியும் என்றார். சென்னை துறைமுகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிநவீன வசதிகளைக் கொண்ட ராஜ்தரங் கப்பலை, பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பல்லம் ராஜூ, கடலோரக் காவல்படையிடம் ஒப்படைத்தார். கிழக்குக் கடலோரப் பகுதியில், ரோந்துப் பணியில் ஈடுபடும் இந்த ராஜ்தரங், 50 மீட்டர் நீளம் கொண்டது. 35 கடல் மைல் வேகத்தில் செல்லும் திறன் படைத்த இந்தக் கப்பலில், ஒருங்கிணைக்கப்பட்ட இயந்திர கட்டுப்பாட்டு வசதிகள் உள்ளன. கண்காணிப்பு பணியில் மட்டுமின்றி, மீட்பு மற்றும் தேடுதல் பணிகளிலும் இந்தக் கப்பல் ஈடுபடும்.

பயணிகளின் நலன் கருதி ஏர்-இந்தியா விமானிகள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜித் சிங் வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் புதிய விமான நிலையத்தை இன்று திறந்து வைத்துப் பேசிய அவர், விமானிகளுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால் அதனை 3 மாதத்திற்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். ஏர்-இந்தியா நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு 30 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதை குறிப்பிட்ட அவர், பிற விமான நிறுவனங்களுக்கு சவால் அளிக்கும் வகையில் ஏர்-இந்தியா செயல்பட வேண்டும் என்றார். விமானிகள் வேலைநிறுத்தம் காரணமாக அதிருப்தியடையும் பயணிகளால், பிற்காலத்தில் ஏர்-இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அஜித் சிங் எச்சரித்துள்ளார். ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 12 நாட்களாக, ஏர்-இந்தியா விமானிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலக கால்பந்து ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் யூரோப்பிய யூனியன் சாம்பியன் லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் BAYERN MUNICH (பேயர்ன் மியூனிக்) அணியும், இங்கிலந்தின் CHELSEA (செல்ஸீ)அணியும் இன்று பலப்பரிட்சை நடத்துகின்றன.
ஐரோப்பிய யூனியன் அளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 76 அணிகள் பங்கேற்ற சாம்பியன் லீக் போட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நடைபெற்று வந்தது. இதில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய BAYERN MUNICH (பேயர்ன் மியூனிக்) அணியும், CHELSEA  அணியும், ஜெர்மனியின் மியூனிக் நகரில் இன்று நடைபெறும் பட்டத்தை வெல்வதற்கான இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் சந்திக்கின்றன. 4 முறை பட்டம் வென்ற பெருமையிலும் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடனும் களமிறங்குகிறது பேயர்ன் மியூனிக் அணி. ஆனால் இதுவரை ஒரு முறை கூட பட்டம் வென்றதில்லை செல்ஸீ அணி. கடந்த 2008-ம் ஆண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறி, பட்டத்தை தவற விட்ட செல்ஸீ அணி இந்த தடவை வெற்றியை நோக்கி முனைப்புடன் விளையாடும் என்று எதிர்பார்க்கலாம்.

இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் இருந்து இருந்து ராணுவத்தை விளக்கிக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
விடுதலை புலிகள் உடனான போரில் இலங்கை ராணுவம் வெற்றி பெற்றதன் மூன்றாம் ஆண்டு விழாவில் பேசிய ராஜபக்சே, வெளிநாடுகளில் உள்ள விடுதலைபுலிகள் தனிநாடு குறித்த கருத்துக்களை மாற்றிக்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டார். எனவே ராணுவ முகாம்களை அகற்றுவது தேசிய பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். போரினால் சாதிக்க முடியாததை மற்ற வழிகளில் அடைய விடுதலை புலிகள் முயற்சிப்பதாக அவர் கூறினார். இலங்கையில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து ராணுவத்தை விளக்கிக்கொள்ள அந்த நாட்டு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலரி கிளிண்டன் வலியுறுத்திய சில மணி நேரங்களில் ராஜபக்சே இந்த கருத்தை தெரிவித்துள்ளார். முன்னதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எம். பெரிஸ் வாஷிங்டன்னில் ஹிலரி கிளிண்டனை சந்தித்து பேசினார். சுமார் 45 நிமிடம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் இலங்கையில் இறுதிகட்ட போரின்போது மனித உரிமை மீறல்கள் குறித்து அந்த நாடே விசாரணை நடத்தும் என்று பெரிஸ் தெரிவித்தார். இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் ராணுவத்தை விலக்கிக்கொள்ளவேண்டும், மனித் உரிமைகளுக்கு அதிக மதிப்பளிக்க வேண்டும் என்று ஹிலரி வலியுறுத்தியதாக தெரிகிறது. இலங்கையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பெரிஸ் விளக்கமளித்தார். எனினும் ஆவணங்கள் எதுவும் அளிக்கவில்லை என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்திய கடலோர காவல்படையில் அதி நவீன வசதிகளைக் கொண்ட ராஜ்தரங் என்ற கப்பல் இணைக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பல்லம் ராஜூ, புதிய கப்பலை அறிமுகப்படுத்தினார். கிழக்குக் கடலோரப் பகுதியில், ரோந்துப் பணியில் ஈடுபடும் எட்டாவது கப்பலான ராஜ்தரங், 50 மீட்டர் நீளம் கொண்டது. ஒருங்கிணைக்கப்பட்ட இயந்திர கட்டுப்பாட்டு வசதிகளை உடைய இந்த கப்பல், கண்காணிப்பு மட்டுமின்றி, மீட்பு மற்றும் தேடுதல் பணிகளிலும் ஈடுபடும். அதிநவீன தொலைத் தொடர்பு வசதிகளை உடைய ராஜ்தரங் கப்பலில் தீ அணைக்கும் வசதி, ஆயுதங்கள், சிறிய வகை விரைவுப் படகுகளும் உள்ளன.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளை போலவே, மருத்துவப் படிப்புகளில் சேரவும் மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.
இதனால், இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களின் விற்பனை, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. சென்னையை பொருத்த வரை, கடந்த 15ஆம் தேதியில் இருந்து 18 ஆம் தேதி வரை 3 நாட்களில் 4 ஆயிரத்து 117 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான காலக்கெடுவை மேலும் நீடிக்க வாய்ப்புள்ளதாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதாவில் வாஜ்பாய்க்கு பின்னர், சரியான தலைவர்கள் இல்லை என அந்த கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா குற்றம் சாட்டியுள்ளனார்.
கட்சியின் இரண்டாம்கட்ட தலைவர்களான அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், நரேந்திர மோடி ஆகியோருக்கு தலைமைப் பண்பு போதவில்லை எனறும் அவர் குறிப்பிட்டுள்ளார். மும்பையில் விரைவில் நடைபெறவுள்ள கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். சுரங்க முறைகேடு வழக்கில் எடியூரப்பாவும், அவரது குடும்பத்தினரும் சிக்கியுள்ள நிலையில், இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தவிட்டது. இத்னை தொடர்ந்து, எடியூரப்பாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த இக்கட்டான நேரத்தில், எடியூப்பாவுக்கு கட்சி மேலிடம் ஆதரவு கரம் நீட்டவில்லை என்று கூறப்படுகிறது.  இதனால், தனது ஆதரவு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்தி வந்தார். திடீரென, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியையும் பாராட்டி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், எடியூரப்பா விரைவில் கட்சியில் இருந்து வெளியேறுவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கட்சி மேலிடம் குறித்து பல்வேறு குற்றச்சர்ட்டுக்களை கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.
ஸ்ரீநகரிலுள்ள G.B Pant அரசு மருத்துவமனையில் நேற்றிரவு மேலும் 4 குழந்தைகள் பலியாகியுள்ளனர். இதன் மூலம் கடந்த நான்கரை மாதத்தில் மட்டும் அந்த மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளங்குழந்தைகளின் எண்ணிக்கை 363 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் குழந்தைகளின் உடல்களை வைத்துக் கொண்டு, அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, முறையான மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவர்கள் இல்லாததே குழந்தைகளின் இறப்புக்கு காரணம் என அவர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த விவகாரத்தில் உமர் அப்துல்லா தலைமையிலான மாநில அரசு, மக்கள் நலன் மீது அக்கறையின்றி செயல்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். பெற்றோர்களின் இந்த மறியல் போராட்டத்தால் ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.

சென்னையில் கட்டப்பட்டு வரும் இலங்கையின் புதிய தூதரகத்தை மூடக் கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தடையை மீறி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு உள்ளிட்ட 26 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்த தூதரகம் முன்பு மற்ற தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தால், நூங்கம்பாக்கம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போர்க் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு விசாரணை நடத்தும் – இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் Peiris
போர்க் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு விசாரணை நடத்தும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் Peiris தெரிவித்துள்ளார். நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர், மறுவாழ்வு திட்டப்பணிகள் குறித்த விரிவான அறிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலரி கிளிண்டனிடம் அளித்தார்.

உள்நாட்டு போரின் இறுதிகட்டத்தில் நடந்த போர்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அட்டர்னி ஜெனரல் விசரணையை தொடங்கியிருப்பதாகவும் அவர் கூறினார். இப்பிரச்னையில் தீர்வு எட்டும் நடவடிக்கை தொடங்கியிருப்பாக கூறிய அவர், எந்த விதமான சர்வதேச தலையீடுகளுக்கும் அவசியமில்லை என்றார். போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவிடம் விளக்கியுள்ளதாக பெரிஸ் கூறினார். கறறுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவில் நிறைவேற்ற இலங்கை ஆர்வமாக உள்ளதாகவும் அவர் கூறினார். பெரிஸ் உடனான சந்திப்பின்போது,  தமிழர் பிரச்னைக்கு நிலையான தீர்வு காண சிறந்த திட்டத்தை உருவாக்குமாறு இலங்கை அரசை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலரி கிளிண்டன் அறிவுறுத்தியுள்ளார்.

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம் இன்று 29 ஆவது நாளை எட்டியுள்ளது. இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நிரந்தர தொழிலாளர்களும் இன்று களமிறங்கியுள்ளனர்.
அனல்மின்நிலையம் 2 மற்றும் சுரங்கம் ஒன்றின் முன்பு இன்று காலை கூடிய தொழிலாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதுதவிர, வரும் 21 ஆம் தேதி, கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவது என்றும், என்எல்சி உணவகத்தில் வழங்கப்படும் உணவை மறுக்கும் போராட்டத்தை வரும் 23 ஆம் தேதி மேற்கொள்வது என்றும் நிரந்தர தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். போராட்டத்திற்கு நிரந்தர தொழிலாளர்கள் அனைவரின் ஆதரவையும் பெறும் வகையில், ஒப்பந்த தொழிலாளர்கள் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் காரணமாக என்எல்சியில் மின்உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை என்எல்சி நிர்வாகம் மறுத்துள்ளது. இந்த சூழலில், வரும் 23 ஆம் தேதி , மண்டல தொழிலாளர் ஆணையர் தலைமையில் 3 ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. ஏற்கனவே புதுச்சேரி மற்றும் நெய்வேலியில் நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை..

உத்தரபிரதேசத்தில் விபத்துக்குள்ளான பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் புனித யாத்திரை சென்ற 25 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த அனைவரும் உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் இருந்து ஆஜ்மீருக்கு புனித யாத்திரை மேற்கொண்டவர்கள். Bahraich மாவட்டத்தில் உள்ள Chilwaria என்ற இடத்தில் எதிரே வந்த லாரி மீது அவர்கள் பயணித்த பேருந்து நேருக்கு நேராக மோதி தீப்பிடித்தது. இதில், பேருந்தில் இருந்த 25 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களில் 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 44 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்தில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறியுள்ள காவல்துறையினர், கவலைக்கிடமான நிலையில் இருப்போரை உயர் சிகிச்சைக்காக லக்னோவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான பேருந்தில் 80 பேர் இருந்தனர். அவர்களில் காயமடைந்த பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

தேனியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான கைப்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில், சென்னை வருமான வரித்துறை மற்றும் விளையாட்டு விடுதி அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. மின்னொளியில் 3 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியானது லீக் சுற்று அடிப்படையில் நடத்தப்படுகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில், சென்னை வருமான வரித்துறை அணியும், தமிழ்நாடு காவல்படை அணியும் விளையாடின. அதில் , 25-20 , 26-24 , 27-25 என்ற செட் கணக்கில் வருமான வரித்துறை அணி போராடி வெற்றி பெற்றது.  மற்றொரு போட்டியில், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை அணியும், விளையாட்டு விடுதி அணியும் மோதின. அதில் 3க்கு 1 என்ற செட் கணக்கில், விளையாட்டு விடுதி அணி வெற்றி பெற்றது.

இலங்கை ராணுவத்தின் இறுதிக்கட்டப் போரில் உயிர்நீத்த மக்களுக்கு கடலூர் மாவட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடலூர் மாவட்டம் குமராட்சியில் நடந்த  நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று மெழுகுவர்த்திகளை ஏந்திச் சென்றனர். இலங்கையில் 2009-ம் ஆண்டு, இறுதிப் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சே மீது போர் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நினைவேந்தலில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.

இணைய தளம் மூலம் பல பெண்களை ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்ததாக 2 பேரை மதுரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவர்கள், கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த சக்கரவர்த்தி மற்றும் அவரது உறவினரும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் ஆகியோர் ஆவர். திருமண தகவல் இணைய தளம் மூலம் கடந்த ஒண்றரை ஆண்டுகளில் 17-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் பறித்ததாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. செல்போன்களில் உள்ள மேஜிக் வாய்ஸ் மூலம் பெண்கள் பேசுவது போலவும் இவர்கள் பாதிக்கப்பட்ட பெண்களிடம் மோசடி செய்தது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.  இணைய தளம் மூலம் வரன் தேடுவோர், இது போன்ற மோசடி நபர்களிடம் இருந்து தப்பிக்க  நன்கு விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்று போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மதுரை ஆதீனத்தின் சொத்துக் கணக்குகளை இந்து அறநிலையத்துறை விசாரிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், நித்யானந்தாவை மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நியமித்ததை ஏற்க முடியாது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. சைவ சமயத்தின் அடையாளமாக திகழும் மதுரை ஆதீனம், பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நித்யானந்தாவை இளைய மடாதிபதியாக நியமிக்க கூடாது என்றும் அக்கட்சி கருத்து தெரிவித்துள்ளது. மேலும், மதுரை ஆதீனம் மற்றும் நித்யானந்தா மீது, நீதிமன்றம் தானாகவே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து மதத் தலைவர்களை நித்யானந்தா பிரிக்க நினைப்பதாகவும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்வதாகவும் அவர் மீது இந்து மக்கள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கு தடைவிதிக்க வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
கிரிக்கெட் என்ற சிறப்பு வாய்ந்த விளையாட்டை, பெருமளவு பணத்தைக் கொட்டி சீர்கெடச் செய்து விட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.பி.எல். என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். சினிமா துறையில் இருப்பவர்கள், அரசு பதவி வகிப்பவர்களுக்கு இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் தொடர்பு இல்லை என்ற நிலையை ஏற்படுத்திவிட்டே, தடை உத்தரவை நீக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஐ.பி.எல். போட்டிகளால் நாட்டின் பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சுப்ரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.