திண்டுக்கல் ஆட்சியர் கே.நாகராஜன் சென்னை மாநகராட்சிக்கு மாற்றம்: சென்னை மாநகராட்சியில் வருவாய், நிதி துணை ஆணையராக நாகராஜன் மாற்றம்: திண்டுக்கல் மாவட்ட புதிய ஆட்சியராக என்.வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்: விழுப்புரம் மாவட்ட வருவாய் அதிகாரியாக இருந்து வருகிறார் வெங்கடாசலம்: கடலூரில் கே.வீரராகவ ராவ் கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்: கடலூரில் புயல் புனரமைப்பு பணிகளை மேற்பார்வையிட கே.வீரராகவ ராவ் நியமனம்: தற்போது திருச்சி மாநகராட்சி ஆணையராக உள்ளார் கே.வீரராகவ ராவ்      ஐஜி ஏ.கே.விஸ்வநாதன் மீதான சொத்துக் குவிப்பு புகாரில் அடிப்படை முகாந்திரம் இல்லை: சென்னை உயர்நீதிமன்றத்தில் ஊழல் தடுப்புப் போலீசார் மனு தாக்கல்: விஸ்வநாதன் மீது விசாரணைக்கு கடந்த திமுக ஆட்சியில் உத்தரவிடப்பட்டிருந்தது: விசாரணையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார் விஸ்வநாதன்: பழி வாங்கும் நடவடிக்கையே விசாரணைக்கு காரணம் என புகார் கூறியிருந்தார்: விஸ்வநாதன் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை: டிவிஏசி நீதிமன்றத்தில் தகவல்: விசாரணையை கைவிட விஜிலன்ஸ் கமிஷனரும் ஒப்புதல் அளித்ததாக நீதிமன்றத்தில் தகவல்: சென்னை மாநகர கூடுதல் ஆணையராக பதவி வகித்தவர் ஏ.கே.விஸ்வநாதன்      இத்தாலிய கப்பல் பாதுகாவலர்களால் இந்திய மீனவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கு: இத்தாலிய கப்பல் பாதுகாவலர்கள் இருவரின் போலீஸ் காவல் மார்ச் 1ம் தேதி வரை நீட்டிப்பு: கொல்லம் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவு      ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டதில் தனக்கு பெரும் பங்குண்டு: ஆஸ்திரேலிய அணியின் எதிர்காலம் கருதி, இம்முடிவு எடுக்கப்பட்டது: இதனால் தனக்கும், ரிக்கி பாண்டிங்-கிற்கும் எந்த மனகசப்பும் ஏற்படாது: டெஸ்ட் போட்டிகளில் பாண்டிங்-கின் ஆட்டம் ஆஸ்திரேலிய அணிக்கு தேவை: க்ளார்க்      நாளை நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இலங்கையை எதிர்கொள்கிறது: ஹோபர்ட் நகரில் இந்திய நேரப்படி காலை 9 மணியளவில் தொடங்குகிறது      SRM பல்கலைக் கழகம் பற்றிய செய்திக்கு புதிய தலைமுறை வருத்தம் தெரிவிக்கிறது      5 பேரில் ஒருவர் SRM பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் என வெளியான தகவல்: இத்தகவலை SRM பல்கலைக்கழகம் மறுத்துள்ளது: SRM பல்கலைக்கழகத்தின் நற்பெயரை சில ஊடகங்கள் களங்கப்படுத்துவதாக கண்டனம்: சம்பந்தப்பட்ட ஊடகங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தல்      2ஜி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் சுப்ரமணியன்சுவாமி: ப.சிதம்பரத்தை விடுவித்த சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு: குறுக்கு விசாரணைக்கு பின் சிதம்பரம் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்படலாம் என மனு: 2ஜி வழக்கில் சிதம்பரத்தை சேர்க்க முடியாது என கீழ் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது      பாகிஸ்தான்: இஸ்லாமாபாத்தில் நிகழ்த்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதல்: வெடிகுண்டு தாக்குதலில் 2 சிறுவர்கள் உட்பட 13 பேர் பலி, 36 பேர் படுகாயம்      வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சசிகலா ஆஜரானார்: சசிகலாவிடம் நீதிபதி மல்லிகார்ஜுனா 18 கேள்விகள் கேட்டார்: பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலாவுடன் இளவரசியும் ஆஜரானார்: இவ்வழக்கு தொடர்பாக சுதாகரன் ஆஜராகவில்லை என தகவல்
நேரடித் தொலைக்காட்சி

இன்றைய முக்கிய செய்திகள்

ஐ.நா. அமைதிக்கான நிர்வாகக் குழுவில் இருந்து இலங்கை சார்பில் இடம்பெற்றிருந்த ஷவேந்திர சில்வா வெளியேற்றப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அந்த குழுவின் தலைவர் Louise Frechette வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷவேந்திர சில்வாவின் பங்களிப்பு தங்கள் குழுவின் நோக்கத்துக்கு உதவிகரமாக இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், ஐ.நா.,வின் சிறப்பு ஆலோசனைக் குழு உறுப்பினர்களிடையே விவாதிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும்

டெண்டுல்கர் ஓய்வுபெற வேண்டும் என்ற கருத்து சரியானது அல்ல என முன்னாள் வீரர் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார். டெண்டுல்கரின் இடத்தை நிரப்புவதற்கு இந்திய அணியில் இன்னும் யாரும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தாம் எப்போது ஓய்வுபெற வேண்டும் என்பது சச்சினுக்கு நன்றாகவே தெரியும் என்றும் முன்னாள் வீரர் வெங்க்சர்க்கர் கூறியுள்ளார். 39 வயதிலும் மற்ற வீரர்களுக்கு நிகராக

இந்திய கிரிக்கெட் அணி கேப்டனின் திட்டங்களுக்கு பின்னால் சரியான காரணங்கள் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் மூத்த வீரர்கள், பீல்டிங் -கில் கவனம் செலுத்தவில்லை என குற்றம்சாட்டியிருப்பது சரியானதே என அக்ரம் தெரிவித்துள்ளார். தோனி ஒரு அறிபூர்வமான கேப்டன் தெரிவித்துள்ள அக்ரம், மனதில் பட்டதை வெளிப்படையாகவே பேசக்கூடியவர் அவர் என்றும் கூறியுள்ளார்.

2 ஜி வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சேர்க்க முடியாது என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சுப்ரமணியன்சுவாமி மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாவுடன் சிதம்பரத்துக்கும் தொடர்பிருப்பதாக தெரிவித்துள்ள சுப்ரமணியன்சுவாமி, அவரிடம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஊழலில் சிதம்பரத்துக்கு தொடர்பில்லை என கடந்த 4ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சசிகலாவும் அவரது உறவினர் இளவரசியும் ஆஜராகினர். இன்றைய விசாரணையின்போது, சசிகலாவிடம் நீதிபதி மல்லிகார்ஜூனய்யா மொத்தம் 23 கேள்விகளை கேட்டார். காலையில் சுமார் 3 மணி நேரமும், பிற்பகல் 2 மணி நேரமும் இந்த விசாரணை நடைபெற்றது. சசிகலா தரப்பில் வழக்கறிஞர் மணிசங்கரும், அரசுத் தரப்பில் வழக்கறிஞர் சந்தேஷ்

சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடும், அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி, இன்று தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த. செல்லப் பாண்டியன் உள்ளிட்ட அமைச்சர்களோடு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அவர் சென்றார். அங்கு, மாவட்ட தேர்தல் துணை அதிகாரி தாமோதரனிடம், வேட்பு மனுவை,

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதியும், சுய பாதுகாப்பைக் கருதியுமே, என்கவுன்ட்டர் நடத்த நேரிட்டதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜே கே திரிபாதி விளக்கமளித்துள்ளார். வங்கிக் கொள்ளையர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சற்று முன் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இரு வங்கிக் கொள்ளைகளிலும் இதே நபர்கள் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறினார். கொள்ளையர்கள் வேளச்சேரியில் தங்கியிருப்பது குறித்து காவல்துறைக்கு

இரு வங்கிக்கொள்ளை தொடர்பாக என்கவுன்ட்டர் நடந்து முடிந்துள்ள நிலையில், மதுரையில் ஒரு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்திருக்கிறது. மதுரை எம்.எஸ்.காலனியில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கி கதவை உடைத்து பணம் கொள்ளையடிக்க மர்மநபர்கள் முயற்சித்திருக்கிறார்கள். பணத்தை கொள்ளையடிக்க முடியாததால், கம்யூட்டரில் இருந்த ஹார்டு டிஸ்கை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிவு

திருப்பூர் நகை கடையில் கொள்ளையடித்த கொள்ளை கும்பலின் வரைபடத்தை திருப்பூர் காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். திருப்பூர் காவல் துறையினர் தனிப்படை அமைத்து தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், திருப்பூர் மட்டுமின்றி, பல்லடம், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வெளிமாநிலத்தவர்களைக் கணக்கெடுத்து அவர்களிடமும்

சென்னையில் இரு வங்கிகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்களில் தொடர்புடைய கொள்ளையர்கள் 5 பேர் நள்ளிரவு சுட்டுக் கொல்லப்பட்டனர். வேளச்சேரியில் உள்ள வீடு ஒன்றில் பதுங்கியிருந்த அவர்களை போலீசார் சுற்றிவளைத்தபோது இந்த சம்பவம் நடந்தது. சென்னை கீழ்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இரு நாட்களுக்கு முன்பு துப்பாக்கி முனையில் 14 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இதேபோல பெருங்குடி தனியார் வங்கியிலும் கடந்த மாதம் 19 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள்

வீடியோக்கள்



Hit Count : 8031052